மது விலக்கை தமிழ்நாட்டில், அமல் படுத்தியே தீர வேண்டும் என, சி.பி.எம்.என் கட்சி கோரிக்கை !
டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிரான மக்களின் எழுச்சி, தமிழகத்தில் மது விலக்கை அமல் படுத்தியே தீர
வேண்டிய கட்டாயத்தை, ஆள்பவர்களுக்கு
ஏற்ப்படுத்தி உள்ளது. காந்தியவாதியான சசி பெருமாள் அவர்களின் தியாக மரணத்தால்
விளைந்த, மக்களின்
கோபத்தையும், குடியினால்
ஏற்ப்படும் உண்மையான சீரழிவையும், தமிழக அரசு
புரிந்து கொண்டு, உடனடியாக
மது விலக்கை அமல் படுத்தினால் மட்டுமே, வரும்
காலத்தில் ஆட்சியைத் தொடர, வாக்கு
கேட்டு மக்களை அணுக முடியும் என்பது திண்ணம். மது விலக்கை அமல் படுத்த வேண்டி, பல முனை போராட்டங்களை கையில் எடுத்துள்ள, பா.ம.க, தி.மு.க, தே.மு.தி.க, ம.தி.மு.க, வி.சி, சி.பி.ஐ, சி.பி.ஐ.(எம்), இ.தே.கா, த.ம.கா மற்றும் மது மறுப்பை வலியுறித்திய
அனைத்து கட்சியினரையும், சி.பி.எம்.என்
- புதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக
மக்கள் சார்பாக, பாராட்டக்
கடமைப் பட்டுள்ளது.